ஞாயிறு, 19 ஜூன், 2016

'கட்ட பஞ்சாயத்து செய்ய, காவல் துறை எதற்கு? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.

குற்றவியல் நடைமுறை சட்டத்தில், 154வது பிரிவின் படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.
'தமிழக காவல் நிலையங்களில், கொடுக்கப்படும் புகார்கள், 'முதல் தகவல் அறிக்கை' என்றழைக்கப்படும், 'பர்ஸ்ட் இன்பர்மேஷன் ரிப்போர்ட் - எப்.ஐ.ஆர்.,' ஆக பதிவு செய்யப் படுவதற்கு பதில், 'சமூக சேவை பதிவேடு' என்றழைக்கப்படும், 'கம்யூனிட்டி சர்வீஸ் ரிஜிஸ்டர் - சி.எஸ்.ஆர்.,' ஆக தான் பதிவு செய்யப்படுகின்றன. எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது தானே முறை?'
புகார் கொடுக்கும்போது, அது முதலில், சி.எஸ்.ஆரில் பதிவாகி, ரசீதாக புகார்தாரருக்கு கொடுக்கப்படுகிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை.காவல் துறை குறித்த மக்களின் விழிப்புணர்வு இப்படி இருக்க, காவல் துறையினர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் சி.எஸ்.ஆர்., பதிவு, அவர்களின் நன்மதிப்புக்கு 'வேட்டு' வைத்திருக்கிறது. 'சி.எஸ்.ஆர்., பதிவு என்பது, போலீசார் நடத்தும் வெறும் கண் துடைப்பு நாடகமே' என, சமீப காலமாய், இப்பதிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
எதற்காக சி.எஸ்.ஆர்.,?- காவல்துறை அளிக்கும் விளக்கம்
'பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் தவிர்த்து, மற்ற புகார்களை, சி.எஸ்.ஆரில் பதிவு செய்கிறோம். நீதிமன்றம், வழக்கு, வாய்தா, தீர்ப்பு என, இழுத்தடிக்காமல், காவல் நிலையத்திலேயே நியாயம் கிடைக்க, இந்த சி.எஸ்.ஆர்., உதவுகிறது. இதனால் தான், பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது' என்கின்றனர் காவல் துறையினர்.மேலும், 'எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர், நியாயம் கிடைக்க, வழக்கு போட்டு காத்திருக்க வேண்டும். அதே போல், குற்றம் செய்தவர், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இருபுறமும், வன்மம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வன்மம், மேலும் பல குற்றங்களுக்கு அடித்தளமாகி விடும். இதை தவிர்க்கவே, சி.எஸ்.ஆர்., பதிவுகளை அதிகப்படுத்துகிறோம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி, பிரச்னையை சுமுகமாக தீர்க்கிறோம்' என்றும் அவர்கள் கூறுகின்றனர். (நன்றி: தினமலர்)
ஆனால், 'கட்ட பஞ்சாயத்து செய்ய, காவல் துறை எதற்கு? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.
'1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். என்பதற்க்கு சட்ட பிரிவுகளில் இடமில்லை என்ற போதும், அது ஓர் நல்ல‌ திட்டம். ஆனால், அதை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், மக்களிடமும், நீதிமன்றத்திடமும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது'
ஆர்.சையத் பஷீர் (நிறுவனர்/ தலைவர்)
ஊழலுக்கு எதிரான அமைப்பு
(Anti Corruption Foundation)