சிறுபான்மையினருக்கு அரசாங்கம் வழங்கி இருக்கின்ற சலுகைகள், கல்வி ஊக்கத் தொகைகள், சிறுதொழில் உதவித் தொகைகள் போன்றவற்றை உள்ளடக்கிய புத்தகம் ஒன்று இருக்கின்றது..
சமூக ஆர்வலர்களால் எழுதப்பட்டது,
அதனை PDF புத்தகமாக்கி வைத்திருக்கின்றேன்,. குறைந்த பக்கங்களை கொண்டதுதான்..
அதில் நம் சமுதாயத்திற்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டி உதவிகள் அனைத்தும் தெளிவாக இருக்கிறது..
அவற்றை முறையாக நாம் பயன்படுத்தாமல் விடுவதன் மூலம், நமக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் யாவும் சரியான முறையில் கையாளப்படாமல் போகலாம்..
அதனால் அதனை அனைவரும் அறிந்து, அவர் அவர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பயனடைய உதவுவோம்..
நிச்சயம் உதவியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள், அவற்றை பயன்படுத்திக் கொள்ள உதவும்..
எதுவுமே எங்களுக்கு அரசாங்கம் வழங்குவதில்லை என்பதை விட வழங்கியதை முறையாக பயன்படுத்துவோம்..