அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியாது..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மும்பையில் ராஜ் தாக்ரேயின் 48ஆம் பிறந்த நாள் விழாவின் போது, மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அஸாதுதீன் உவைசியின் உருவம் வரையப்பெற்ற கேக் வெட்டப்பட்டு, விழா கொண்டாடப்பட்டதாம்.
மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ வாரிஸ் பதான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்புடையவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓர் அரசியல் கட்சித் தலைவரின் படத்தை இப்படிக் கேக்கில் வரைந்து வெட்டுவது அநாகரிகமான, கண்டிக்கத்தக்க அரசியல்தான் என்றாலும் கட்சித் தலைவர்களின் படங்கள் மீது சாணி அடிப்பதைவிட இது பரவாயில்லை என்று தோன்றுகிறது.
இன்னொரு விஷயம், இந்துத்துவ சக்திகளால் உவைசி போன்றவர்களை அவ்வளவு எளிதில் ஜீரணித்துவிட முடியாது. கேக்காக வயிற்றுக்குள் சென்றாலும் உவைசி குடைந்து எடுத்துவிடுவார்.
-சிராஜுல்ஹஸன்