புதன், 15 ஜூன், 2016

கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்”

கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்” என மிரட்டும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

பார்க்க வீடியோ 

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அரசியலை முன்னெடுப்பதாக கூறி கடந்த 20 வருடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் போன்ற அமைப்புகள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது  என்றால் அது கண்கூடான உண்மையே.
ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, அதன் வேர்களுக்குத் திருப்பி அழைத்து வருவதாகக் கூறி பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகளுக்கு, வட இந்தியாவின், ஒடுக்கப்பட்ட இன மக்களும் தீவிர ஆதரவாளர்கள்தான்.
இந்த அமைப்புகளுக்கு மதச்சார்பின்மை என்றாலே ஒவ்வாமைதான். இந்து மரபுகள் என்று கூறப்படுபவைகளை நிலை நிறுத்தும் ஹிந்துத்துவாதான் இவர்களின் ஒரே கொள்கை.
குறிப்பாக பெண்களிடம் மேற்கத்திய கலாச்சாரம் பரவக்கூடாது என்பதற்காகவே விஷ்வ ஹிந்து பரிஷத்  வளர்த்தெடுத்த அமைப்புதான் “துர்காவாகினி”. இந்து கலாசாரத்தை போதிப்பதாகக் கூறி, 15 வயது முதல் 25  வயது வரையிலான இளம் பெண்களுக்கு, இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெறும் பயிற்சி அல்ல தீவிர பயிற்சி.
இந்த அமைப்பில், இளம் பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து “The World Before Her” என்ற பெயரில், இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் நிஷா பஹூஜா இயக்கிய ஆவணப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ளது. 
இந்த  ஆவணப்படத்தில் “துர்காவாகினி”யில் பயிற்சி பெறும் பிராச்சி என்ற சிறுமியிடம் எடுக்கப்பட்ட பேட்டி, அங்கு பயிற்சி அளிக்கும் பெண்களின் பேட்டி, எல்லாவற்றையும் தமிழாக்கி எழுத்து வடிவமாக இங்கு அளிக்கிறோம். அப்படியே விடியோவையும்  பதிவிட்டிருக்கிறோம். 
****
பிராச்சி (15 வயது சிறுமி) – (0.1-0.44 ) ////  (9.42 – 10.30)
Capture.JPG
*நான் ஒரு இந்து என்பதை வெளிப்படையாக பேசுவேன். நான் ஒரு இந்து என்பதை,  பெருமையாகச் சொல்வேன்.
பேட்டியாளர் கேள்வி: ஹிந்துத்துவாவிற்காக கொலையும் செய்வாயா ?

ப்ராச்சி பதில்:  கண்டிப்பாக கொலை செய்வேன் எந்த நொடியிலும். என் மதத்திற்கு எதிராக போகும் அனைவரையும்.  நான் காந்தியவாதி இல்லை. சொல்லப்போனால் நான் காந்தியை வெறுக்கிறேன்.

சாத்வி பிரக்யா சிங் தெரியுமல்லவா ? அந்த மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். அவரை போல ஆக வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.  சூழல் ஏற்பட்டால், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கும் தயங்கமாட்டேன்.
****
துர்காவாகினி அமைப்பில் பயிற்சி பெறும் மற்றொரு இளம் சிறுமி (10.31 -11)
Capture.JPG
பேட்டியாளர் கேள்வி: இஸ்லாமிய நண்பர்கள் யாராவது இருக்கிறீர்களா ?
இளம் சிறுமி பதில்: (கேள்வி முடிவதற்குள்ளாகவே பதில் வருகிறது) இல்லை. ஆண் பெண் என்று எந்தவொரு இஸ்லாமிய சிநேகிதர்களும் எனக்கில்லை. அதில் எனக்கு பெருமையே. 
****
துர்காவாகினி அமைப்பின் பயிற்சியாளர் (2.15 – 2.47)
Capture.JPG
*இந்த உலகின் மிகப்பெரும் மதம் என்று ஏதாவது ஒன்று இருந்தால், அது இந்து மதம் மட்டுமே. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
*துர்காவாகினி அமைப்பில் 15 வயது முதல் 25  வயது வரையிலான இளம் பெண்களுக்கு நம்முடைய மதம் பற்றியும் நம்முடைய கலாச்சாரம் பற்றியும் நம்முடைய தேசம் பற்றியும் பயிற்சி அளிக்கிறோம். அவர்களின் அறிவுக்கண்களை திறக்க உதவுகிறோம்.
****
துர்காவாகினி அமைப்பின் மற்றொரு பயிற்சியாளர் (4.00- 5.00)
1.JPG
*இந்த பயிற்சி முகாமில் பெண்களுக்கான கடமைகள் என்ன ? என்பதை பற்றி சொல்ல விரும்புகிறேன்.
*அவர்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால்,  25 வயதில் பெண்கள் மிக வலிமையானவர்களாக மாறி விடுவதால், அவர்களை கையாளுவது மிகவும் சிரமம்.
*இன்றைய பெண்கள் கல்வியறிவு மட்டும் பெறவில்லை, தலைக்கனத்தையும் பெற்றிருக்கிறார்கள். பெண்களின் ஈகோவை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே, வேலை வேலை என்று பணியின் பின்னால் ஓடி கொண்டிருக்கிறார்கள். இது அவசியம் தேவையா ? இந்தளவிற்கு நாம் மேற்க்கத்திய மோகம் பிடித்து அலைய வேண்டுமா ? இது போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் இருந்தால், அதை அழித்து விடுங்கள்.
*ஆண்-பெண் சமம் என்று பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் நன்றாக யோசித்து பாருங்கள். பெண்களாகிய உங்களால்,  உங்களின், பலவீனத்தை உங்களால் மறைக்க முடியுமா ? ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே ஒரு பெண்ணின் நடத்தைதான் முக்கியமாக பார்க்கப்பட்டது. அது தற்போதும் மாறவில்லை.
****
துர்காவாகினியின் ஆண் பயிற்சியாளர். (14.08 )
Capture.JPG
*நம்முடைய புராணங்களில் சூர்பனகையைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்கள் அல்லவா ? அந்த அசுரர்களை போல, நம்முடய மதத்தின் மீது தாக்குதல் நடத்துபவர்கள்தான்  இஸ்லாமியர்களும் / கிறிஸ்துவர்களும்.
*காந்தி கற்றுக்கொடுத்த அகிம்சையின் மூலமாகவா நாம் விடுதலை வாங்கினோம் ? இல்லை. ஆயிரக்கணக்கானவர்களின் உயிர் தியாகத்தின் மூலம்தான் நாம் விடுதலை வாங்கினோம்.
*நாம் யாரயும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் நம்மை யாராவது தொந்தரவு செய்தால், அவர்களை நாம் விடுவதும் இல்லை.
****
அந்த டாக்கியூமென்ட்ரியின் இறுதி காட்சியாக, துர்காவாகினி அமைப்பை சேர்ந்த இளம் பெண்கள் ஊர்வலமாக போகிறார்கள்.
எட்டு வயது கூட நிரம்பியிராத சிறுமிகள் இப்படி கத்துகிறார்கள்.
“உங்கள் நெற்றிக்கு  ரத்தத்தில் திலகமிடுங்கள் ; எதிரிகளுக்கு துப்பாக்கி குண்டுகளால் வரவேற்பு அளியுங்கள் “

Related Posts: