உத்தரப்பிரதேசத்தில் நூறு ரூபாய் லஞ்சம் தராததால், இரண்டு தொழிலாளர்களை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மணிப்பூர் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் லாரியில் செங்கல் ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களை, தடுத்து நிறுத்திய காவல்துறையினர், நூறு ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர்கள் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
பிரதே பரிசோதனையில் தாக்குதல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட இளைஞர்களின் உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை கலைக்க முயன்ற காவலர் ஒருவரை, ஆத்திரமடைந்த கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இளைஞர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, நான்கு காவல்துறையினர், 2 ஊர் காவல்படை வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
August 06, 2016 - 10:57 AM
http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/india/7/45845/two-labourers-refuse-to-give-bribe-of-rs-100-up-police-beat-them-to-death