சனி, 6 ஆகஸ்ட், 2016

வெள்ளிவிழா கொண்டாடும் உலகின் முதல் இணையதளம்


Benersஉலகின் முதல் இணையதளம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


உலக அளவில் வேர்ல்டு வைட் வெப் எனப்படும் ஒரே அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த முதல் இணையதளத்தினை இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ, கடந்த 1989-ல் வெற்றிகரமாக உருவாக்கினார். இணையதள உலகில் பெரும் புரட்சியாகக் கருதப்படும் இந்த முதல் இணையதளம் சில லிங்குகளைக் கொண்ட எழுத்துகளால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருந்தது.
இணைய உலகில் புரட்சியை ஏற்படுத்திய டிம் பெர்னர்ஸுக்கு இங்கிலாந்து அரசு ’சர்’ பட்டமும், நைட் விருதும் வழங்கிக் கவுரவித்துள்ளது.