பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களில் 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஏடிஆர் என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடும்போது அளித்த உறுதிமொழிப் பத்திரங்கள் குறித்து ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தனியார் அமைப்பு அவர்களில் 31 சதவீதம் பேர், தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளது.
மேலும், அவர்களில் 14 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இவற்றின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பதிவு செய்த நாள் : August 06, 2016 - 09:44 AM