பிரதமர் நரேந்திர மோடி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிராமேஸ்வரத்தில் விவசாயிகள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தகடலில் விதைகளை கொட்டி யாகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு புஜைகளை நடத்திய விவசாயிகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என கூறி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நதிகளை இணைப்போம் என கூறிய பிரதமர் இரண்டு ஆண்டுகளாக அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் போலீசார் விவசாயிகளை, சமாதானப்படுத்தி அருகில் இருந்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பதிவு செய்த நாள் : August 06, 2016 - 02:22 PM
Source: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/45882/rameshwaram-farmers-protest-to-link-rivers-in-india