புதன், 17 ஆகஸ்ட், 2016

கூகுள் டியோ !

‪#‎GoogleDuo‬
‘ஸ்கைப்’-க்கு போட்டி..
வந்துவிட்டது கூகுள் டியோ !
கூகுள் இல்லையேல்... இணையத்தில் எதுவும் இல்லை என்று மாறிவிட்ட சூழலில், முன்னணி நிறுவனங்களின் அப்ளிகேஷன்களையும் கூகுள் தொடர்ந்து முறியடிக்க தொடங்கியிருக்கிறது.
வீடியோ அழைப்புகளுக்காக பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட்டின் ஸ்கைப், ஃபேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிளின் ஃபேஸ்டைம் உள்ளிட்ட அப்ளிகேஷனுக்கு போட்டியாக டியோ என்ற பிரத்யேக அப்ளிகேஷனை களமிறக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
இன்று அதிகாரப்பூர்வமாக அப்ளிகேசனை வெளியிட்டுள்ள கூகுள், வீடியோ கால் சேவையை எளிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு செல்பேசி எண் மட்டும் மோதும் என்கிறது கூகுள்.
இந்த அப்ளிகேஷனை பெற தற்போது, கூகுள் ஸ்டோரில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்றும், இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் வசதியாக, நாக் நாக் என்ற சிறப்பம்சம் உள்ளது. அதன்படி, அழைப்பை ஏற்கும் முன்னதாக அழைப்பவரை திரையில் காணலாம்.
அதேபோல், இணைய வேகம் குறைந்திருக்கும் போது அழைப்பு துண்டிக்காமல், வீடியோவின் தரம் மட்டும் குறையும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: news18

Related Posts: