வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உலகம் முழுவதும் தற்பொழுது ஒலிம்பிக் காய்ச்சல் தொற்றியுள்ளது. பல மக்களும் தங்கள் நாடுக்கு அதிக தங்க பதக்கங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒலிம்பிக் போட்டியை கண்டு களித்து வருகின்ற்னர். இந்த ஒலிம்பிக் தொடர் கடந்த 5ஆம் தெதி துவங்கியது. வரும் 21ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் சுமார் 202 நாடுகள் கலந்துக்கொள்கின்றன.
ஒலிம்பிக்கில் 400 மீட்டருக்கு தடுப்பு ஓட்டத்தில் இந்திய அணிக்காக கேராளவை சேர்ந்த 21 வயதான இளம் வீரர் முஹம்மது அனஸ் யஹ்யா தகுதி பெற்றுள்ளார். இவர் தற்பொழுது பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பில் விளையாட சென்றுள்ளார்.
இதற்கான தகுதிச்சுற்றில் ஒலிம்பிக்கின் தகுதி நேரமான 45.50 வினாடிகளுக்குள் ஓடியுள்ளார்.
இவர் ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.

Related Posts: