வியாழன், 13 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை” -ராகுல் காந்தி

Image
உலகையே உலுக்கி வரும் கொரொனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு நாள்தோறும் சீனாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் இருந்து 3711 பயணிகளுடன் ஜப்பான் சென்ற டைமன்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலை அந்நாட்டு அரசு கரையில் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு எதிரொலியால் அதில் உள்ள பயணிகள், கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 இந்தியர்கள் உள்பட 174 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Corona
உலகிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டிவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
credit ns7.tv