வியாழன், 13 பிப்ரவரி, 2020

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு!

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 02.10.2018 ம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வரும், துணை முதல்வரும் தங்களை பிடல் காஸ்ட்ரோ என்றும், சேகுவேரா என்றும் அழைத்துக்கொள்கின்றனர் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு பதிலளித்த சீமான், இந்த மாதிரி செய்திகளை கேட்கக்கூடாது, இது போன்ற கொடுமைகள் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் முன்பே இறந்துவிட்டனர் என்றார்.
ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, தமிழக அரசு சட்டசபையை கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது தமிழக அரசு என்று குற்றம்சாட்டிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்றார்கள். ஆனால், நாங்கள் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே, அதற்கான நிதியும் ஒதுக்கவில்லையே என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், நாங்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்று தமிழக அரசு சொல்லிக்கொண்டிருக்கின்றது. அப்படி என்றால் அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது என்ன? எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம்; இது ஒரு வேடிக்கை விளையாட்டு இதைதான் நாம ரசிச்சிகிட்டு இருக்கோம் என்றார்.
இந்நிலையில், தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச்சட்டம் 153, 505 (1)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
credit ns7.tv/ naan thamilar