வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்திற்கு துரோகம் இழைக்க பார்க்கிறது - வைகோ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மக்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருப்பது மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதையே காட்டுகிறது என தெரிவித்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்பபெற தயாரா எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv