புதன், 10 ஆகஸ்ட், 2016

இந்தியர்களின் தேசிய வியாதி மறதி . நன்றி !

உலகின் முதல் பத்து சக்திமிக்க நாடுகளில் ஒன்றான இந்தியா ஓலிம்பிக் போட்டிகளில் மண்ணை கவ்வ காரணம் ஏராளம் ,ஏராளம். இந்தியாவில் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும் தான். மிச்சம் உள்ள எந்த விளையாட்டிற்கு நாம்முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்தியாவில் மத்திய அரசின் அளவில் Ministry of Youth Affairs And Sports Myas- கீழ் இயங்குவது இந்திய ஒலிம்பிக் அசோசேஷன் IOA,மற்றும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா SAI, மாநில அளவில் அதே போன்ற அமைப்பு அதாவது SOA-State Olympic Association , SDA State Development authority என்று நிர்மானித்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு என்றே பிரதியேகமாக சில விளையாட்டுகளையும் , மற்ற விளையாட்டுகளை அந்த SAI கட்டுப்படுத்துகிறது . ஏகப்பட்ட Schemes , திட்டங்கள் போன்றவற்றை இந்த அமைப்புகள் ஏற்படுத்தினாலும் அது எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வீணாகப்போகிறது .காரணங்கள் :
1. அலட்சியம் , அக்கறையின் மை , பாரபட்சம் , ஊழல் , நிதி பெரும் விதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் விதிகளை காலத்திற்கு ஏற்ப சீர் அமைக்காதது .
2. திறமையான விளையாட்டு வீரர்களை தேர்தெடுக்காமல் , தனியார் விளையாட்டு அசோசேஷனிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு அவர்களின் சொந்தம் , பந்தம் , மற்றும் திறமை குறைந்தவர்களை தேர்ந்தெடுப்பது .
3 .வேலை உறுதியின்மை . அதாவது ஒரு வீரர் 30 வயது முடிந்தவுடன் விளையாட்டுகளில் இருந்து ஒய்வு பெற்றவுடன் ஜீவனத்திற்கு எந்த வழியின்றி இருக்கிறார் .அநாதை ஆக்கப்படுகிறார் . அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்களின் விளையாட்டு காலம் முடிந்தவுடன் தேசிய அளவு பரிசு வென்றவர்களுக்கு (கலந்து கொள்பவர்களுக்கும்) மத்திய அரசின் வேலையும் , மாநில அளவு பரிசு பெற்ற அனைவருக்கும் மாநில அரசின் கீழ் வேலையும் கட்டாயமாக கொடுக்க வேண்டும் .வேலை போக விருப்பம் இல்லாதவர்களுக்கு கணிசமான தொகையினை ஓய்வுஊதியமாக கொடுக்கப்பட வேண்டும் .
4. சி எஸ் ஆர் எனப்படும் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடியில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் மானியம் பெரும் அனைத்து நிறுவனங்களிலும் சதவீத அளவில் விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் மாதம் ஊக்க தொகை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் . இது கட்டாயமாக்கப்பட வேண்டும் . { பெயரளவிற்கு தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது }
5. பட்டி தொட்டி எங்கிலும் பல வீரர்களின் திறமை கண்டுபிடிக்கப்படாமல் வீணடிக்கப்படுகிறது
6. ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கும் நிர்வாகத்தினர் விமானப்பயணத்தின் போது பிசினஸ் கிளாசில் இவர்களும். எக்கனாமிக் கிளாசில் விளையாட்டு வீரர்களும் பயணித்து ஒலிம்பிக் விளையாட்டுக்கு செல்வது என்பது விளையாட்டு வீரர்களை இந்தியர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்று தெரிகிறது .இந்த எண்ணம் மாற வேண்டும் .
7. எந்த ஒரு வீரரும் தத்தம் குறைகளை ஆன்லைனில் மேலிடத்தை தொடர்புக்கொண்டு நிவர்த்தி செய்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்த வேண்டும் .
இதை எல்லாம் நாம் ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன் மறந்து விடுவோம் .அடுத்த ஒலிம்பிக் போட்டியின் போது தான் மறுபடியும் ஆத்திரப்படுவோம். இந்தியர்களின் தேசிய வியாதி மறதி . நன்றி !

Source : FB : D Latha Prabhu

Related Posts: