செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

டுவிட்டர் லோகோவில் இருப்பது என்ன பறவை தெரியுமா?... சுவாரஸ்யமான தகவல்கள்!

பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் டுவிட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி நிறுவப்பட்டது. டுவிட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை டுவிட்டர் கொண்டுள்ளது.
Twitter
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பல பிரபலங்கள் முகநூலை விட டுவிட்டரை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். டுவிட்டரில் தன்னை பின் தொடரும் நபர்களுடன் நாம் நேரடியாக தொடர்புக் கொள்ள ஏதுவாக இருக்கிறது.
டுவிட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். டுவிட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் டுவிட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். டுவிட்டரின் டிரென்ட்டிங் முறையால் உலக நெட்டிஷன்கள் டுவிட்டர் பக்கமாக மெல்ல, மெல்ல தலை திருப்பி வருகின்றனர்.
ஸ்வீடன் நாட்டின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயன்பாடு உரிமை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்வீடன் குடிமகனுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு பதிவான ஒரு போலியான டுவீட் அமெரிக்க ஸ்டாக் மார்கெட்டில் 130 பில்லியன் டாலர் குறைவு ஏற்பட காரணியாக அமைந்தது. ஒரு நாளுக்கு 5 மில்லியன் டுவீட்களை அமெரிக்க மத்திய புலனாய்வு துறையினர் படிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு மக்கள் தொகையை விட பாப் பாடகர் ஜஸ்டின் பைபர்-க்கு டுவிட்டரில் அதிகமான ஃபாலோவர்கள் இருக்கின்றனர். டுவிட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை.
இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் டுவிட்டரை பயன்படுத்துவது இல்லை.