வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சவூதி மன்னர் சல்மான் உத்தரவு.....!!


சவூதி அரேபியாவிலுள்ள சில நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்தியர்கள் ஆவர்.
இதுதொடர்பாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்டுள்ள உத்தரவில்....
1. வேலையை இழந்த ஆயிரக்கணக்கானோரின் சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனே ஒப்படைக்க வேண்டும்.
2. வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களில் பணிப்புரிய விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
3. வேலையை இழந்தவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் வரை அவர்களின் இருப்பிடம், உணவு மற்றும் மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.
4. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்ப Exit விசா அடித்து தரப்படும்.
5. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.
6. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பள பாக்கி வைத்திருந்தால் தொழிலாளர் அமைச்சகத்தில் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு.
மேற்கண்டவாறு மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.