10 துளசி இலைகளைப் பறித்து அலசி வைக்கவும். 10 மிளகை பொடிக்கவும். சித்தரத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும். 600 மில்லித் தண்ணீரில் துளசி இலை, மிளகுப்பொடி, சித்தரத்தை சேர்த்து கொதிக்க வைத்து 200 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூட்டில் பருகவும். குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சட்டென நிவாரணம் கிடைக்கும்.