ரியோ ஒலிம்பிக்கின் பீச் வாலிபால் போட்டிகளில் எகிப்து பெண்கள் அணியினர் முழுமையாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்து ஆடுவது பரவலாகப் பேசப்படும் அம்சமாக மாறியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. இரு வேறு பண்பாடுகள் ஒன்றிணைவதைக் குறிக்கும் வகையில் இது அமைந்திருப்பதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வேறு சிலர், விளையாட்டில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் குறிப்பதாகக் கூறியுள்ளனர். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு பீச் வாலிபால் போட்டியில் தங்களது விருப்பப்படி ஆடையை அணிந்து கொள்ள பங்கேற்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
Source: New gen Media