வருமான வரித்துறை சோதனை எதிரொலியாக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 12 இடங்களில் சோதனை முடிந்துள்ளது. ராமமோகன ராவ் ரூ.16 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ராமமோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
December 22, 2016 - 10:16 PM