திங்கள், 15 மே, 2017

சீனாவை சமாளிக்க இந்தியாவின் அடுத்த ஆயுதம் May 15, 2017

சீனாவை சமாளிக்க இந்தியாவின் அடுத்த ஆயுதம்


இந்தியாவின் நீளமான ஆற்றுப் பாலம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ளது. அசாமில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி இந்த மாதம் 26ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தோலா - சடியா பாலத்தின் சிறப்பம்சம்

►அசாம்-அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா - சடியா பாலம் கட்டப்பட்டுள்ளது.

►சீன எல்லைக்கு அருகே கட்டப்பட்டிருக்கும் தோலா- சடியா பாலத்தின் நீளம் - 9.15 கி.மீ

►மும்பை, பாந்த்ரா-ஒர்லி இடையே கடலில் கட்டப்பட்டுள்ள பாலத்தை விட 3.55 கி.மீ அதிக நீளம். 

►கட்டுமானப் பணிக்காக ஏற்பட்ட செலவு - ரூ. 950 கோடி

►60 டன் எடையுடைய ராணுவ பீரங்கிகளைத் தாங்கும் வலிமை கொண்டது இந்த பாலம்.

►2011-ல் தொடங்கப்பட்ட கட்டுமான பணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்துள்ளது.

►தோலா- தடியா பாலம் சீனா எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

►இந்திய ராணுவம் இந்தப் பாலத்தை பெருமளவில் பயன்படுத்தும்.

►இந்திய ராணுவத்தினரையும், ராணுவ தளவாடங்களையும் எல்லை நோக்கி விரைவாக எடுத்துச் செல்ல இந்த பாலம் பெரிதும் உதவும்

►அசாம் - அருணாச்சல பிரதேசம் இடையேயான பயண நேரத்தை 4 மணி நேரம் குறைக்கிறது.

►இந்திய எல்லைப் பகுதிக்குள் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், அருணாசல பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த தோலா - சடியா உதவும்.