செவ்வாய், 20 ஜூன், 2017

ராம்நாத்துக்கு போட்டியாக மீரா குமார்? June 20, 2017


ராம்நாத்துக்கு போட்டியாக மீரா குமார்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு போட்டியாக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை காங்கிரஸ் கட்சி களம் இறக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் பாஜக தேர்ந்தெடுத்ததன் மூலம் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ராம்நாத்துக்கு போட்டியாக களம் இறக்க வேண்டிய சூழல் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த மக்களை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. 

எனினும் வரும் 22ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில்தான் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராம்நாத் கோவிந்த்தை பாஜக வேட்பாளராக்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்ததன் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக போட்டியை ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார். 

Related Posts: