வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

​அதிகரிக்கும் வெப்பம் - அழியும் அபாயத்தில் வட இந்தியா! August 04, 201

​அதிகரிக்கும் வெப்பம் - அழியும் அபாயத்தில் வட இந்தியா!



பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது (வெட் பல்ப் டெம்பரேச்சர்) மற்றும் ஈரப்பதம் சேராதது (டிரை பல்ப் டெம்பரேச்சர்) என விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது.

இந்த வெட் பல்ப் டெம்பரேச்சரின் குறைந்தபட்ச வெப்பநிலை அளவு 2100-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்று ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

சமீப வருடங்களாகவே, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரமான வெப்ப அலைகள் உருவாவதன் இடைவெளி குறைந்து வருகிறது. ஒடிசாவில் 1998-ம் ஆண்டு, ஆந்திராவில் 2003-ம் ஆண்டு, குஜராத்தில் 2010-ம் ஆண்டு அதிகமான வெப்ப அலை அளவு பதிவாகியுள்ளது. 2015-ல் 5-வது பயங்கர வெப்ப அலைகள் ஏற்பட்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 3,500 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், 2100ம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்படப்போகும் இந்த பாதிப்பால் கங்கைநதிக்கரை பகுதிகள், வடகிழக்கு இந்தியா, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதி, சோட்டா நாக்பூர் பீடபூமி, பாகிஸ்தானின் சிந்து சமவெளிப்பகுதி ஆகிய இடங்களில் மனித உயிருக்கு அதிஆபத்தை ஏற்படும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி வெப்பம் அதிகரிப்பதால், நகர்ப்புறங்களில் அதிக மக்கள் தொகை உள்ள இடங்களிலும், கிராமப்புறங்களில் அதிக அளவு திறந்த வெளிகளில் பணியாற்றும் சூழல் உள்ள இடங்களிலும் வசிப்பவர்கள் பாதிப்படைபவர்கள். இதனால், கடுமையான வறுமை ஏற்படும்.

இத்தகைய சூழலில் நல்ல காற்று வசதி இருந்தும், நல்ல நிழல் வசதி இருந்தும், நல்ல உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட மரணமடையும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.