ஓமலுர் மாட்டு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு 10 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனையாகியுள்ளதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெருமாள்கோவில் மாட்டு சந்தை, தமிழகத்தின் மிகப்பெரிய மாட்டு சந்தைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா,கேரளா, ஒரிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் மாடு விற்பனைக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் வழக்கம் போல் மாட்டு சந்தை களைகட்டியது.
இந்த சந்தையில் பால்கறவை பசுமாடுகள், உழவு மாடுகள், காளை மாடுகள் அதிக அளவில் விற்பனையானது. இன்று மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை ஆகியுள்ளதால் விவசாயிகளும், வியபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.