வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தீர்வு கண்டவரை கைது செய்த அமெரிக்க அரசு! August 04, 2017

தீர்வு கண்டவரை கைது செய்த அமெரிக்க அரசு!


உலகெங்கும் பல்வேறு நிறுவனங்களையும் பாதித்த வானகிரை ரேன்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை கண்டறிந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் பெரும் நிறுவனங்களை வெகுவாக பாதித்த பாதித்த வன்னா கிரை ரான்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிமுறையை கண்டறிந்த ப்ரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் வல்லுநரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்கஸ் ஹட்சின்ஸ் உலகை அச்சுறுத்திய ரான்சம்வேர் மால்வேரினை செயல் இழக்கச் செய்யும் வழிமுறையை  கண்டறிந்தார்.  

உலக நிறுவனங்களை அச்சுறுத்திய ரேன்சம்வேர் பாதிப்பில் இருந்து அனைவரையும் விடுவித்த ஹட்சின்ஸ் மால்வேர்டெக் என்றும் அறியப்படுகிறார். இந்நிலையில், ஹட்சின்ஸ் அமெரிக்காவின் நெவாடா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மார்கசை கைது செய்ததற்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Posts: