வியாழன், 20 ஜூலை, 2017

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இடைவிடாது பெய்யும் கனமழை! July 20, 2017

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இடைவிடாது பெய்யும் கனமழை!


நீலகிரி மாவட்டம் கூடலூரில் இடைவிடாது பெய்த கனமழையால் ஆற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், புத்தூர்வயல் ஒட்டிய தேன்வயல் ஆதிவாசி காலனியில், வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். 

தேவர்சோலை 2ஆவது மைல் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனிடையே, பலத்த மழையின் காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: