சிவகாசியில் 6வது நாளாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் தொடர்வதால், பத்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விதியில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இப்போராட்டம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தால் தினமும் 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பட்டாசு தொழிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை, விரைந்து முடிக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.