திங்கள், 1 ஜனவரி, 2018

குவிந்த வாழ்த்துக்கள் - முடங்கிய வாட்ஸ் அப்! January 1, 2018

Image

வாழ்த்துக்களை ஓரே நேரத்தில் பலரும் தெரிவித்ததால், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், நள்ளிரவில் வாட்ஸ் அப் சேவை முடங்கியது.

புது வருட பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு, லட்சக்கணக்கானோர் வாட்ஸ்அப்பில் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பை பலரும் பயன்படுத்தியதால், சுமார் ஒருமணி நேரம் அதன் சேவை முடங்கியது. இதனால் வாழ்த்துக்களை பகிர முடியாமல் பயனாளிகள் தவித்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, வாட்ஸ் அப் சேவை சீரானது.