முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அமைதி காப்பது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி விசாரணையைத் தாமதப்படுத்தவும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த விவகாரத்தை
குழிதோண்டி புதைக்கவும் தமிழக அரசு துடிப்பதாக கூறியுள்ளார்.
இதனால், தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், ஜெயலலிதா மரண மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.