ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

குன்னூர் பகுதியில் துரியன் பழ சீசன் தொடக்கம்..! September 24, 2017

​குன்னூர் பகுதியில் துரியன் பழ சீசன் தொடக்கம்..!


நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் துரியன் பழ சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் துரியன் பழங்களை வாங்கிச்செல்கின்றனர். 

குன்னூர் அருகே பர்லியார் அரசு பழப்பண்ணையில் 33 துரியன் பழ மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துரியன் பழ சீசன் களைகட்டும் நிலையில் நடப்பாண்டு போதிய பராமரிப்பு இல்லாததாலும், வனவிலங்குகளாலும் குறைந்தளவு பழங்களே விளைந்துள்ளன. 

இருப்பினும் அருகிலுள்ள தனியார் பண்ணைகளில் துரியன் பழம் அதிகளவில் விளைந்துள்ளன. அரசு பழப்பண்ணையில் 300 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ துரியன் பழம், தனியார் பண்ணைகளில் 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இந்த நிலையில், தோட்டக்கலை துறை மரங்களை முறையாக பராமரித்தால், துரியன் பழங்கள் இது போன்று அதிக விலைக்கு விற்கப்படுவது தடுக்கப்படும் என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.