வெள்ளி, 22 செப்டம்பர், 2017

இனப்படுகொலை கொடூரம் - குடிக்க தண்ணீர் இல்லாமல் இறந்த கர்ப்பிணி September 22, 2017


​இனப்படுகொலை கொடூரம் - குடிக்க தண்ணீர் இல்லாமல் இறந்த கர்ப்பிணி


மியான்மரில் நடக்கும் ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியர்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் காக்ஸ் பஜார் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற முகாம் ஒன்றில் தங்கியிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குடிப்பதற்கு தண்ணீரும், உரிய சிகிச்சையும் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாத நிலையில், முகாமின் அருகிலேயே சடலத்தை எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்தனர். 

ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடூரத்தின் தீவிரத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இந்த பரிதாப மரணம் இருக்கிறது.

ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளின் மனசாட்சியை நோக்கி கேள்வி கேட்கும் மரணமாக இது அமைந்திருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.