வெள்ளி, 29 செப்டம்பர், 2017

வனுவாட்டு தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்...! September 28, 2017

வனுவாட்டு தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்...!


வனுவாட்டு தீவின் வடபகுதியில் உள்ள Ambaeவில் எரிமலை வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. 

பசிபிக் கடலின் தென்பகுதியில் உள்ள வனுவாட்டு தீவில் மொனாரோ எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலை வெளியேற்றிவருகிறது. தீ பிழம்புகளும் எழும்பி வருகின்றன. இதையடுத்து அந்த எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்ட தீவுகளில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். 

எரிமலை வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் வடபகுதியில் உள்ள Ambae தீவில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் 15க்கும் மேற்பட்ட உதவி மையங்களை அதிகாரிகள் திறந்துள்ளனர். தற்போதைய நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இம்முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.