வெள்ளி, 29 செப்டம்பர், 2017

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்! September 29, 2017

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்!


விழுப்புரம் மாவட்டத்தில் டெங்குக்காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் 1500க்கும்   மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பகுதியாக  கள்ளக்குறிச்சியாக  உள்ளது.  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இங்கு தான் உள்ளது. கடந்த சில மாதங்களாக, கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது.

குப்பைகள் , சாக்கடைகள் போன்றவற்றை முறையாக அள்ளப்படுவதில்லை என்பது இப்பகுதி மக்களின் புகாராக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மார்கெட் , மந்தைவெளி என மக்கள் கூடும் இடங்களில் சாக்கடை நீர்தேங்கி கிடப்பதாலும், தெருக்களில் உள்ள சாக்கடைகளை தூர்வாராத காரணத்தாலும் கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் உள்ளது. 

இதன் காரணமாக டெங்குகாய்ச்சல் பரவிவருவது தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.