வியாழன், 21 செப்டம்பர், 2017

அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதங்கம் September 21, 2017


அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதங்கம்

பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையாளும் மதவாத சக்திகள் நாட்டை ஆள்வதால் சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பு சிதைந்து வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, அமைதியும், சமூக நல்லிணக்கமும் இந்தியாவில் பெரும் சவால்களை  சந்தித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ஒவ்வொரு நாளும் புதியதாக வேலைதேடும் 30,000 பேரில் 450 பேருக்கே வேலை கிடைப்பதாக தெரிவித்தார். 

சரியான வேலை வாய்ப்பை அளிக்காமல் இளைஞர்களுக்கு தெளிவான முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.