சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனை முதலமைச்சர் பதவி நீக்கம் வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை மற்றும் நகைப்பட்டறைக் கழிவுகளால் நுரை மிதந்து சென்றதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், வீடுகளில் சோப்பு போட்டு குளித்ததால் நுரை பெருக்கெடுத்து ஓடியதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளது அபத்தத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கத்தை பார்க்கும் போது உலக விஞ்ஞானிகள் அனைவரும் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகிப்பது போன்று உள்ளதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு நொய்யலாற்றில் விஷக்கழிவுகள் திறந்துவிடப்பட்டது போன்று மீண்டும் ஏற்படும் என எச்சரித்துள்ள அன்புமணி, அமைச்சர் கருப்பணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இல்லையே அரசு பதவி விலகட்டும் என்றும் தெரிவித்துள்ளார்