புதன், 20 செப்டம்பர், 2017

​தந்திரத்தை கையாள்கிறது எடப்பாடி அரசு: திருமாவளவன் குற்றச்சாட்டு! September 20, 2017

​தந்திரத்தை கையாள்கிறது எடப்பாடி அரசு: திருமாவளவன் குற்றச்சாட்டு!


பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் சட்ட சிக்கல் மூலம் ஆட்சியை நீட்டிப்பது என்ற தந்திரத்தை எடப்பாடி அரசு மேற்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, மாநில அரசுகளை பலவீனப்படுத்தி ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற எண்ணத்தோடு பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். 

நிவாரண நிதிக்குக் கூட மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். 

Related Posts: