வியாழன், 28 செப்டம்பர், 2017

மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..! September 28, 2017

​மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..!


2 ஆண்டுகளுக்கு பிறகு, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்றைய தினம் 21,648 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 33,569 கன அடியாக உயர்ந்தது. 

அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையின் நீர்மட்டமும் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்றிரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது நீர்இருப்பு 49.39 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை:

காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 3 மணி நேரத்தில் 11 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. 

இன்று காலை 10 மணிக்கு நீர்வரத்து 54 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

Related Posts:

  • அல்லாஹூ அக்பர்... கவிதா கதீஜாவாக... அல்லாஹூ அக்பர்... தூய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு பெண்மனி எந்த அளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால் , இஸ்லாத்திலே இருந்து கொ… Read More
  • இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... இதுவாடா மார்க்கம் மூடர்களே.....இதை ஒழிக்கத்தானே நபி ஸல் அவர்கள் பாடுபட்டார்கள்.......இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... (function(d, s, id) { var j… Read More
  • தொப்பை குறைய எளிய பயிற்சி...!!! முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரைய… Read More
  • கேன்சரை தடுக்க உதவும் பழங்கள் திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், ‘ரெஸ்வெரட்டோல்’ எனப்படும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் ச… Read More
  • A/C அறையில் சிறுநீரக கோளாறு !!! நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDN… Read More