சனி, 23 செப்டம்பர், 2017

IRCTCயின் அதிரடி அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி! September 23, 2017

IRCTCயின் அதிரடி அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!


IRCTC இணையதளத்தில் 7 வங்கிகளின் அட்டைகள் மூலம் மட்டுமே இனி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அனைத்து வகை கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இனி குறிப்பிட்ட 7 வங்கிகளின் கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. 

அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, சென்ட்ரல் வங்கி, ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் ஆகிய 7 வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மட்டுமே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
 
மேற்கண்ட ஏழு வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் நெட் பேங்கிங் மூலம் ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.