பூமி தனது ஆறாவது பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த டேனியல் என்ற கணித மேதை எச்சரித்துள்ளார்.
பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் 2100 ம் ஆண்டுக்குள் பூமி அழியும் என அவர் கூறியுள்ளார்.
இதில் முதலில் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்றும் அதை தொடர்ந்து மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடரும் என தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜுராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில் உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. இவை பல லட்சம் ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்தவை. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டு நடக்க இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.