புதன், 27 செப்டம்பர், 2017

​ஐ.நா சபையில் போலி புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் - பதிலடி தந்த இந்தியா! September 27, 2017



​ஐ.நா சபையில் போலி புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் - பதிலடி தந்த இந்தியா!

ஐ.நா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப்படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டினார். அப்போது முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் அவர் காட்டினார்.

அந்தப் புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்றும்  இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த புகைப்படம் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் அங்கிருக்கும் பெண் ஒருவர் இறந்த போது எடுக்கப்பட்ட படமாகும்.

பாகிஸ்தான் பிரதிநிதி மலிஹா லோதி காட்டிய அந்த புகைப்படத்தில் இருப்பவர் காசா நகரத்தில் நடைபெற்ற வான் வழி தாக்குதலில் பலியான ரவ்யா அபு ஜோமா என்கிற 17 வயது இளம்பெண். 
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதியின் பேச்சுக்கு பிறகு பேசிய  இந்திய பிரதிநிதி பவ்லோமி திரிபாதி பாகிஸ்தானின் போலித்தனத்தை போட்டு உடைத்தார்.