மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்காதபோது, 3 தொகுதி இடைத்தேர்தலில் கைரேகை பெற்றது எப்படி? என வினவியுள்ளார்.
தன்வசம் இருந்த இலாகாக்களை, ஓ. பன்னீர்செல்வத்திற்கு மாற்ற, ஆளுநருக்கு பரிந்துரைத்து, ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், இந்த மர்மங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு
தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.