வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஃபேஸ்புக்கில் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட அரசு ஊழியர் கைது..!! September 22, 2017

​ஃபேஸ்புக்கில் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட அரசு ஊழியர் கைது..!!


அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

உள்ளாட்சித் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் ​ஃபேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

நீதிபதியை விமர்சித்த மேலும் ஒருவர் கைது:

இதேபோல், நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்ததாக கூறி அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்தின்போது அரசு ஊழியர் முருகன் என்பவர் நீதிபதியை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.