புதன், 20 செப்டம்பர், 2017

புதுச்சேரி நகரப் பகுதியில் அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு! September 20, 2017

​புதுச்சேரி நகரப் பகுதியில் அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு!


புதுச்சேரியில் நகரப் பகுதியில், அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாணவ,  மாணவிகளின் நலன் கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் நண்பகல் 12:25 வரையிலான நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை  ஆனால், மதியஉணவு இடைவேளை நேரம், 12:25-ல் இருந்து 2 மணி வரையாக இருந்ததில், 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பிற்பகல் ஒன்றரை மணிக்கே வகுப்புகள் தொடங்கி, 30 நிமிடம் முன்னதாக மூன்று மணி 45 நிமிடங்களுக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு இடைவேளை நேரம் அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவியர் வெளியே சென்று வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts: