நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் திடீரென வெடிச் சத்தத்துடன் புகை வெளியேறியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்கிணறு பகுதியிலுள்ள மகேந்திரகிரி மலையில், இந்திய விண்வெளி துறையின் முக்கிய பிரிவான திரவ இயக்க உந்தும மையம் செயல்படுகிறது.
இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் 60 சதவீத தயாரிப்பு இங்கு நடைபெறும் நிலையில், இந்த மையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனிடையே, இப்பகுதியில் மர்ம விமானம் பறந்தது குறித்து விசாரணை நடத்த ஏற்கனவே மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மலைப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து, புகை வெளியேறியதாக கூறும் அப்பகுதி மக்கள், இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.