
முதலமைச்சர் பழனிசாமி அரசு இனியும் தொடரக் கூடாது என அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் குடகு பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ள தனது ஆதரவு முன்னாள் எம்எல்ஏ-க்களைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
மேலும், பதவி முக்கியம் என கருதாமல், அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது ஆதரவாளர்கள் பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதிமுக அம்மா அணியுடன் ஓபிஎஸ் தரப்பினர் இணையவில்லை என்றும், அவர்கள் இபிஎஸ் தலைமையிலான மற்றொரு பிரிவுடன் மட்டுமே இணைந்துள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.
ஓ. பன்னீர் செல்வத்துடன் சேர்ந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி கூட்டியது, அதிமுக அம்மா அணியின் பொதுக் குழு அல்ல என தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.