சனி, 23 செப்டம்பர், 2017

​மக்கள் சோப்பு போட்டு குளிப்பதாலே நொய்யல் ஆறு மாசுபட்டது - அமைச்சர் கருப்பண்ணன் September 23, 2017

​மக்கள் சோப்பு போட்டு குளிப்பதாலே நொய்யல் ஆறு மாசுபட்டது - அமைச்சர் கருப்பண்ணன்



நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததை அடுத்து நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்தது. இதற்கு சாயக்கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், ஆற்றை ஆய்வு செய்த அமைச்சர் சாதாரன குடிநீரில் சுமார் 500 என்கிற அளவில் உப்பு இருக்கலாம் என்றும், தற்போது ஆற்றில் 700 என்கிற அளவிலேயே உப்பு இருப்பதாகவும், 1200 என்கிற அளவில் இருந்த உப்பின் அளவு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.