வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஆஷுரா நோன்பு 2017 ( sat & sunday )

ஆஷுரா நோன்பு
இன்று இரவு ஆஷுரா நோன்பு ( 29/09/2017) ஸஹர் செய்யவேண்டும் , 30/09/2017 மற்றும் 1/10/2017, பிறை 9 மற்றும் 10

...

ஆஷுரா நோன்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுராநோன்பு எனப்படும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில்அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்புநோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர்இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவுசெய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்றுஅறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில்நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும்நோன்புநோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப்பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள்(பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம்அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த்முஅவ்வித் (ரலி),
நூல்: புகாரி 1960
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்புகட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1592
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்புநோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போதுநபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளையூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும்நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால்அடுத்த ஆண்டுவருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089