செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தமிழர்கள் பயன்படுத்திய 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோடரி கண்டெடுப்பு..! September 26, 2017

தமிழர்கள் பயன்படுத்திய 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோடரி கண்டெடுப்பு..!


ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

போகலூர் அருகே அழகன்குளம் கிராமத்தில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வு துறையினர் களஆய்வு செய்தனர். அப்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி, தானியங்கள் அரைக்க பயன்படுத்தப்பட்ட அரைப்புக் கற்கள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடுகள், மண்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்கு பயன்படும் தக்களி, இரும்பு தாதுக்கள், இரும்பு கழிவுகள் உள்ளிட்ட ஏராளமானப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இதனையடுத்து கீழடியை தொடர்ந்து ராமநாதபுரம் அழகன்குளம் பகுதியிலும், அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்வதின் மூலம், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.