ஞாயிறு, 16 மே, 2021

விழுப்புரம் அருகே தலித்துகளை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார் மீது வழக்கு

 

விழுப்புரம் மாவட்டம் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள் 3 பேர் ஊர் பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழுவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’’கடந்த 12ஆம் தேதி ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி நடைபெற்ற கோயில் திருவிழா போலீசார் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அன்று மாலையே நடைபெற்ற இசை நிகழ்ச்சியையும் தடுத்து நிறுத்திய போலீசா, இசைக்கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர்

ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் போலீசாரிடம் கேட்டக்கொண்டதை தொடர்ந்து, இசைக் கருவிகளை போலீசார் திருப்ப கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், திருவிழா நடப்படு குறித்து போலீசாருக்கு யார் தகவல் கொடுத்தது என்று தலித் சமூகத்திரிடம் ஊர் பஞ்சாயத்தார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில்  தாங்கள் செய்தது தவறுதான் எனக் காலனியைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் தலித் சமூகத்தினருக்கு தண்டனை அளிக்கும் விதமாக அச்சமூகத்தை சேர்ந்த 3 பேர், பஞ்சாயத்தார் முன்னிலையில் ஊர் பொதுமக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல் செய்த தலித் சமூகத்தினர், இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறி காலில் விழுந்துள்ள்னர்.  இதனையடுத்து பஞ்சாயத்தார் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களிவ் வைரலான நிலையில், இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்தனர். இந்த இரு புகாரின் பேரில் வழக்கு ப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏடிஎஸ்பி தேவநாதன் , திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ் ஆகியோரை முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டநந்தல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சிலரை ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் காலில் விழ வைத்து அவமானப்படுத்தி உள்ளனர். அதுதொடர்பான செய்தி எனக்குக் கிடைத்ததுமே மாவட்ட எஸ்பி அவர்களிடம் பேசினேன். எப்.ஐ.ஆர் (FIR) போடச் சொல்லியிருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கச்சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கச்சொல்லி வலியுறுத்தினேன் என கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dalit-community-who-have-fallen-on-their-feet-in-near-villupuram/

Related Posts: