ஆக்ஸிஜன் நெருக்கடி குறைந்து வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள், நாட்டில் கடந்த 72 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜனுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் முதல் முறையாக சரிவைக் காட்டுகின்றன.
“உண்மையான நுகர்வு ஒரு நாளைக்கு 8,900 மெட்ரிக் டன்னில் இருந்து ஒரு நாளைக்கு 8,000 மெட்ரிக் டன் ஆக குறைந்துள்ளது” என்று ஒரு அதிகாரி கூறினார். வழங்கப்பட்ட அளவு குறைந்துவிட்டாலும், கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது பதிவு செய்யப்பட்ட தேவையை விட இது இன்னும் அதிகமாக உள்ளது.
ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் அதிகாரமுள்ள ஒரு குழுவினரால் பராமரிக்கப்படும் தகவல்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மொத்த ஆக்ஸிஜன் மே 9 அன்று ஒரு நாளைக்கு 8,944 மெட்ரிக் டன் உச்சத்தை எட்டியதைக் காட்டுகிறது. அதுவே மே 18-19 தேதிகளில் ஒரு நாளைக்கு 8100 மெட்ரிக் டன் ஆக குறைந்தது. ஆனால், இது மே 20 அன்று மீண்டும் ஒரு நாளைக்கு 8,334 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
மொத்த ஆக்ஸிஜன் அளவு என்பது உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பாளர்களால் சிலிண்டர்கள் மூலம் வழங்கப்பட்ட திரவ ஆக்ஸிஜனை உள்ளடக்கியது.
முதல் அலையின் போது, செப்டம்பர் 29, 2020 அன்று திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ஒரு நாளைக்கு 3,095 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகபட்ச விற்பனை காணப்பட்டது. அதன் பின்னர், அது கீழ்நோக்கிய போக்கைப் பின்பற்றியது. உண்மையில், இந்த ஆண்டு மார்ச் 31 அன்று திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விற்பனை ஒரு நாளைக்கு 1,559 மெட்ரிக் டன் மட்டுமே.
இருப்பினும், கொரோனா பாதிப்புகள் உயரத் தொடங்கியபோது, அடுத்த வாரங்களில் திரவ மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது. இது ஏப்ரல் 30 அன்று ஒரு நாளைக்கு 8,000 மெட்ரிக் டன்னை கடந்தது, மேலும் மே முதல் வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்தது. மே முதல் வாரத்தில்தான் நாட்டில் அதிக தினசரி பாதிப்புகள் ஆன சுமார் 4.14 லட்சம் மே 6 அன்று பதிவாகியுள்ளன.
மே 9 ஆம் தேதி உச்சத்தை எட்டிய பின்னர், மருத்துவமனைகளுக்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் சீரான சரிவைப் பதிவு செய்து மே 14 அன்று 8,394 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது. ஆனால் அது மீண்டும் மே 17 அன்று 8,900 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இருப்பினும், மே 18-19 அன்று, மருத்துவமனைகளுக்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் 8,100 மெட்ரிக் டன்களாக இருந்தது.
குறிப்பிடத்தக்க வகையில், மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் இன்னும் ஒரு நாளைக்கு 8,000 மெட்ரிக் டன் வரை உயர்ந்து கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் குறைந்துள்ளது.
மே 8 ஆம் தேதி அரசாங்க தரவுகளின்படி, கிட்டத்தட்ட 50,000 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும், 14,500 க்கும் மேற்பட்டவர்கள் வென்டிலேட்டர் ஆதரவிலும், 1.37 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் ஆதரவிலும் இருந்தனர்.
செப்டம்பர் மாதத்தில் முதல் அலையின் போது சுமார் 23,000 நோயாளிகள் ஐ.சி.யுகளில் இருந்தபோதும், வென்டிலேட்டர்களில் 4,000 க்கும் குறைவானவர்களாகவும், சுமார் 40,000 பேருக்கு ஆக்சிஜன் ஆதரவு தேவைப்பட்டதாகவும் இருந்ததை விட இது மிக அதிகம்.
திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கோரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை ஏப்ரல் 15 அன்று 12 இல் இருந்து மே 8 இல் 33 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகம் உள்ளது.
source https://tamil.indianexpress.com/india/oxygen-supply-covid-crisis-coronavirus-cases-306072/