25.5.2021
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக, தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று 36 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. அதே போல, கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையும் 400க்கு மேல் பதிவாகி வருகிறது. தினமும் 36 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்படுவதால் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், புதிய கொரோனா நோயாளிகளை பல மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்கு படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள், அரசு கொரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவமனைகளில் மருத்துவமனைகள் மட்டுமில்லாமல், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குறைந்தது 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும், தொற்று அதிகரிப்பின் காரணமாக, சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க ஆக்ஸிஜன் வசதியுடனான படுக்கை வசதி கிடைக்க வில்லை என்ற புகார்கள் எழுந்தன. பல கொரோனா நோயாளிகளின் உறவினர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் கிடைக்கததால் பல மருத்துமனைகளுக்கு அலைந்து திரிந்ததாக ஊடகங்களில் தெரிவித்தனர்.
இதற்கு காரணம், எந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கைகள் இருக்கிறது என்ற தகவல் தெரியாதது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள ஒரு இணையதளத்தை தொடங்கி பதிவேற்றி வருகிறது.
தமிழக அரசின் https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில், மாவட்ட வாரியாக கோவிட் நோயாளிகளை அனுமதிப்பதற்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் படுக்கை வசதிகள் எண்ணிக்கை நிலவரத்தை பதிவேற்றியுள்ளன.
இந்த இணைய தளத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை கோவிட் மருத்துவமனைகள், கோவிட் மிதமான கோவிட் பாதிப்பு உள்ளவர்களுக்கு கோவிட் சுகாதார மையங்கள், லேசான கோவிட் பாதிப்பு உள்ளவர்களுக்கு கோவிட் பராமரிப்பு மையங்கள், மிகவும் லேசான கோவிட் நோயாளிகளுக்கு இண்டெரிம் கோவிட் பராமரிப்பு மையங்கள் என அனைத்து மையங்களிலும் கிடைக்கக்கூடிய படுக்கை வசதிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த https://tncovidbeds.tnega.org/இணையதளத்துக்குள் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எந்த மாவட்டத்தில் எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி தேவை என்பதைப் பொறுத்து அவர்களுக்கு தேவையான மாவடங்களில் படுக்கை வசதி காலியாக உள்ளதா என்று பார்த்து தெரிந்துகொண்டு பயனடையலாம். மேலும் அந்த மருத்துவமனைகளை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இருப்பதைத் தெரிந்துகொள்ள https://tncovidbeds.tnega.org/ என்ற இணைய தளத்துக்கு செல்ல வேண்டும். பிறகு, எந்த மாவட்டத்தில் மருத்துவமனை படுக்கை வசதி தேவையோ அந்த மாவட்டத்தின் பெயரை PLEASE SELECT DISTRICT என்ற பெட்டியில் தேர்வு செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். இதையடுத்து, “மருத்துவமனைகளில் கோவிட் பயன்பாட்டிற்கு உள்ள காலி படுக்கைகளின் விவரம் இந்த வலைத்தளத்தில் அந்தந்த மருத்துவமனைகளால் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனினும், சிகிச்சை பெறுவோரின் சேர்க்கைகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையின் மாறும் தன்மை காரணமாக படுக்கைகளின் இருப்பு நிலை அவ்வப்போதான மாற்றத்திற்குட்பட்டது. காலிபடுக்கைகளின் சமீபத்திய விவரத்தினை அறிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையினை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காலிபடுக்கைகளின் விவரம் பதிவேற்றம் தொடர்பான தேதி மற்றும் நேரம் ஒவ்வொரு மருத்துவமனைகளின் பெயருக்குக்கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று வரும். இதில் ஒப்புதல் பட்டனை கிளிக் செய்தவுடன் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு கோவிட் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த மருத்துவமனையின் தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது. தேவையான மருத்துவமனையில் படுக்கை வசதி காலியாக இருப்பதை அறிந்து பயனடையலாம்.
தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதி நிலவரம்:




